மைக்ரோஸ்கோப்புகள் அதிக அளவில் தயாரிக்கப்பட வேண்டும்: தமிழிசை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tamilisai soundarrajan apmcmeet - 2026

மைக்ரோஸ்கோப்புகள் அதிக அளவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

நம் நாட்டில் மைக்ரோஸ்கோப்புகளின் தயாரிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்று தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை விடுத்தார். நுணுக்கமான ஆராய்ச்சிக்கும் பரிசோதனைக்கும் மைக்ரோஸ்கோப்புகள் மிகவும் உதவிகரமானவை என்றார் அவர்.

tamilisai soundarrajan apmcmeet1 - 2026

மாதாபூர் ஹெச்ஐசிசி Hyderabad International Convention Centreல் பன்னிரண்டாவது ஆசியா-பசிபிக் மைக்ரோஸ்கோபி மாநாட்டினை டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில் புகார்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை மைக்ரோஸ்கோப் கண்டுபிடிப்பு துடைத்தெறிந்து விட்டது என்றார்.

கண்ணுக்குத் தெரியாதவற்றையும் விஷுவலைஸ் செய்யும் நிபுணத்துவம் மைக்ரோஸ்கோபிஸ்டுகளுடையது என்று குறிப்பிட்டார். மேலும், மைக்ரோஸ்கோப் தொழில்நுட்பம் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டார் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.