
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவர் புதுக்கோட்டையில் வங்கி கேஷியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் எட்வினுக்கும், தஞ்சையைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளிலிருந்து எட்வின் மனைவியுடன் சரியாக நேரம் செலவழிக்காமல், மூன்றாம் நபரை போல பழகி வந்துள்ளார்.
இதனால் எட்வின் மீது சந்தேகம் எழவே, அவருடைய பீரோவை ஆய்வு செய்தபோது, அதில் பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் என இருந்துள்ளது. அந்த லேப்டாப்பில், எட்வின் பல பெண்களுடன் ஆபாசமாக இருந்த வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்துள்ளன.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கணவன் எட்வின் மீது அப்போதே தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது போலீசார் நடத்திய விசாரணையில், விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தபோது, சில வாடிக்கையாளர் பெண்களிடம் தந்திர பேச்சு மூலம் எட்வின் அவர்களை கவர்ந்துள்ளார்.
