ராமநாதபுரம் அருண்பிரகாஷ் படுகொலையைக் கண்டித்து… இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
hmk-protest-madurai
hmk-protest-madurai

இராமநாதபுரத்தில் இந்து இளைஞர் அருண்பிரகாஷ், மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப் பட்டதைக் கண்டித்து, இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய இளைஞர் அருண்பிரகாஷ் படுகொலையைக் கண்டித்து, மதுரை அருகே அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் படுகொலையான அருண் பிரகாஷ் வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் …

சேலம் சிவனடியார் சரவணன் தற்கொலைக்கு காரணமான காவல் சார்பு ஆய்வாளர் மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அருண் பிரகாஷ் மற்றும் சிவனடியார் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்…

தேசவிரோத பயங்கரவாதிகளை விடுதலை செய்ய கோருவதும் பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்துவரும் மதவெறி பிடித்த தேசவிரோத இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சோழவந்தான் தொகுதித் தலைவர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார்.
ஒன்றியச் செயலாளர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சிங்கராஜ், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூர் ஒன்றியத் தலைவர் பூமிநாதன், துணைத் தலைவர் சுரேஷ் பிரபு உள்ளிட்டோர், கொலையாளி மீது நடவடிக்கை கோரி கோஷமிட்டனர்.
ஒன்றிய துணைச் செயலர் முரளிக் கண்ணன் நன்றி கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.