
மதுரை கரிமேட்டில் முன்விரோதத்தில் கத்திக்குத்து: இளைஞர் கைது!
மதுரை ஜன 1: முன்விரோதத்தில் ஒருவர் கத்திக்குத்து வாலிபர் கைது.
ஆரப்பாளையம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ஜெயபால் 56 இவருக்கும் பொன்னகரம் பெரியசாமி கோனார் சந்து வை சேர்ந்த முருகன் என்ற முருகேசன் 29 முன்விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று பொன்னகரம் முதல் தெருவில் ஜெயபாலை வழிமறித்து முருகேசன் கத்தியால் குத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபால் கொடுத்த புகாரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
விதவை பென்ஷன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நூதன மோசடி: மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு!
மதுரை ஜன ஒன்று பெண்ணுக்கு விதவை பென்ஷன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் சாந்தா 76 மேலமாசி வீதி அருகே சென்ற போது அவரிடம் நைசாக பேசி ஒருவர் விதவை பென்ஷன் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 800 ரூபாய் கொடுத்தால் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பிய சாந்தா தன் மணிபர்சில் 2 பவுன் நகையுடனீபணத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார் அதை வாங்கிய மர்ம ஆசாமி நைசாக அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் இந்த மோசடி தொடர்பாக சாந்தா திலகர் திடல் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
பொங்கல் பரிசு வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நகை பணம் மோசடி மர்ம ஆசாமி தப்பி ஓட்டம்!
பொங்கல் பரிசு வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி நகை பணம் மற்றும் ஆதார் கார்டுடன் தப்பி ஓடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கரும்பாலை கீழத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சரோஜா இவர் சொந்த வேலை காரணமாக மாவட்ட நீதிமன்றத்துக்கு சென்று ள்ளார் அங்கு நீதிமன்ற வளாகத்திற்குள் அந்த பெண்ணை சந்தித்த மர்ம நபர் பொங்கல் பரிசு வாங்கித் தருவதாக கூறி அந்தப் பெண் வைத்திருந்த மணிபர்சை வாங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்
அந்த மணிபர்சில் அரை பவுன் நகை பணம் ரூபாய் 2575 மற்றும் ஆதார் கார்டு ஸ்மார்ட் கார்டு வீட்டு சாவி அனைத்தும் இருந்தன அவற்றுடன் அங்கிருந்து தப்பி ஓடிய வாலிபரை அண்ணாநகர் போலீசார் தேடி வருகின்றனர்..