
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவியின் உத்தரவுப் படி, பாத யாத்திரையே போனாலும், வேப்பிலை கட்டி ஆடினாலும்… இந்து விரோதியே என்று, பாஜக.,வின் காயத்ரி ரகுராம் டிவீட் பதிவு செய்துள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவு:
தினம் ஒரு நாடகம் நடத்தும் ஸ்டாலின் தனது மனைவி துர்காவின் உத்தரவுப்படி ஐ பேக் குழு ஏற்பாட்டில் நாளை தொண்டாமுத்தூர் பரமேஸ்வரன் பாளையம் கொங்கு திருப்பதி பெருமாள் கோவிலுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பில் நடந்து வந்து சாமி தரிசனம் செய்து விபூதி பூசி குங்குமம் இட்டு பத்திரிகையாளர்கள் முன்பு போஸ் கொடுத்து தான் இந்து விரோதி அல்ல என நாடகமாடி இந்துக்களை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்.
ஸ்டாலினே நீங்கள் பாத யாத்திரையே போனாலும் வேப்பிலை கட்டி ஆடினாலும் சரி திமுக இந்துக்களின் விரோதி என்பதை ஒருகாலும் மறக்கமாட்டோம் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்
ஜன.2 அன்று, பரமேஸ்வரன் பாளையத்தில் கொங்கு திருப்பதி கோயிலில் நடைபெறவுள்ள ஸ்டாலினின் கிராமசபைக் கூட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி, இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட ஒன்றிய தலைவர் ஏ.வி. லெவின் குமார், கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகார் மனுவையும் தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார் காயத்ரி ரகுராம்!