
ஆமாம்.. மிஸ்டர் கமல்ஹாசன்… ஊருக்கே வாய் கிழிய என்னல்லாமோ சொல்றீங்க?! நான் கேப்பேன்… ஆமா… நான் கேப்பேன்! அப்படித்தான் கேப்பேன் என்றெல்லாம் காரின் மீது ஏறி நின்று மைக் பிடித்து கூக்குரலிடும் கமலஹாசனே… அதே காருக்கு நீங்க இன்னும் இன்ஸூரன்ஸே கட்டலியே…?! ஏன்?!
அதான் சொல்றோம்… சிஸ்டம் கெட்டுக் கிடக்கு! அதைச் சொன்னவரையும் இப்போ வாய மூடவெச்சிருக்கு இந்த கெட்டுப்போயிருக்கிற சிஸ்டம்! ஆனா நீங்க இன்னும் வாய் தொறந்து … கேப்பேன் கேப்பேன் தட்டிக் கேப்பேன்… தவறை தட்டிக் கேப்பேன்னு சொல்றீங்களே… கொஞ்சம் உங்க கார் கதவையும் தட்டிக் கேளுங்க.!
இப்படி கருத்துகள் உலாவருகின்றன சமூகத் தளங்களில்!
