‘இந்த’ சட்டத்தின் வன்கொடுமையால்… சொந்த வீடுகளை விற்றுவிட்டு… ஊரைக் காலி செய்யும் மக்கள்!

uttar pradesh house - 2026

உ.பி., மாநிலம், கோதுவா கிராமத்தில் மக்கள் தங்கள் வீடுகளை வலுக்கட்டாயமாக விற்று விட்டு வெளியூர்களுக்குச் செல்கின்றனர். இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் தங்களுக்கு அளிக்கப் படும் சலுகைகளால் மிதப்பு ஏறி இருக்கும் சிறுபான்மையினர் அரசியல் கட்சிகளை மிரட்டி கைக்குள் போட்டுக் கொண்டு செய்து வரும் அடாவடிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் இந்த கிராம மக்களை வாட்டி வதைக்கிறது, நாட்டின் பழைமையான சட்டம் ஒன்று. அது, எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டம் முறைகேடாகக் கையாளப் படுவதுதான்!

இதுபற்றி இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் ஏதாவது பிரச்னைகளில் எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் பொய்யான புகார்கள் கொடுக்கப் பட்டு, அதன்கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, எங்களை வாழ விடாமல் செய்கிறார்கள். நாங்கள் இதனால் பெரிதும் சோர்ந்து ஏமாற்றமும் வேதனையும் அடைகிறோம். எனவே நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டுச் சென்றுவிட எண்ணுகிறோம் என்று உள்ளம் குமுறிக் கூறுகின்றனர்.

இது குறித்த தகவல்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பலத்த விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. வரதட்சிணை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தைப் போல், எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எந்த அரசுக்கும் இதில் கைவைக்க தைரியமில்லை, வாக்கு வங்கி அரசியலால் பொதுவானவர்கள் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்காகப் பரிந்து பேச இங்கு எவருமே இல்லை என்று தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

பாஜக., ஆளும் உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படுவது யோகி ஆதித்யநாத்துக்கு அவப்பெயர்தான் என்று கூறும் சிலர், அவர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். அதே நேரம், இப்போதும் ஜாதியின் பெயரால் பெண்களுக்கு வன்கொடுமைகள் இழைக்கப் படுகின்றன; இவை உத்தரப் பிரதேசத்தில் இன்னமும் ஜாதீயக் கட்டுமானத்தின் பெயரால் நடக்கின்றன; எனவே இது போன்ற சட்டங்கள் இன்னும் தேவைதான் என்றும் பதில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர் சிலர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories