உயிருக்கு போராடும் நடிகர்! வலை தளங்களில் உதவி நாடும் உறவினர்!

இந்தியா சற்றுமுன் சினிமா பொது தகவல்கள்
nakul nambi - 2026

மலையாள மொழியில் கடந்த ஆண்டு சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் பதினெட்டாம் படி. இந்த படத்தில் மனோஜ் கே.ஜெயன், சுராஜ் வெஞ்சரமூடு, அஹானா கிருஷ்ணா, கே.ஜெயன், அய்யப்பன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி, பிருத்விராஜ், ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nakul - 2026

இந்த படத்தில் சோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் இளம் நடிகர் நகுல் தம்பி. இவர் டான்ஸ் ரியாலிட்டி ஷோ என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

20 வயதான நகுல் அடுத்து சில மலையாள திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் காரில் மதுரைக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது மதுரை அருகே எதிர்பாராத விதமாக அவர்கள் மதுரை கார் தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் நகல் தம்பிக்கும், அவர் நண்பருக்கும் மிகுந்த காயம் ஏற்பட்டது.

nakul 1 - 2026

இந்த விபத்தில் இவருக்கு மூளை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை சிகிச்சைக்காக 7 லட்சம் செலவு செய்தும் இன்னும் அவர் கண் விழிக்கவில்லை. மேலும் பதினைந்து நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், ரூ.12 லட்சம் வரை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

sonu - 2026

இதனை அடுத்து நகுலின் குடும்பத்தினர் மற்றும் நடிகை அஹானா கிருஷ்ணா, அவரது நண்பர்கள் சமூக வலைத்தளம் மூலமாக பணம் திரட்டி வருகின்றனர். மேலும், இதுவரை 23 திரட்டி மேல் பண உதவி வந்து சேர்ந்துள்ளது. இளம் நடிகர் நகுல் தம்பியின் உடல் நலம் குறித்து மலையாள சினிமாவுலகில் மிக பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

nakul 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.