December 5, 2025, 5:45 PM
27.9 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 69): ஆப்தேயின் மனப் போராட்டம்!

godse - 2025

பாகிஸ்தானிற்கு வெடிப்பொருட்கள் கொண்டுசெல்லும் ரயிலை தகர்ப்பதை நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு குடும்பப் பிரச்சனைகள் ஆப்தேயின் மனதை ஆட் கொண்டிருந்தது. மகனின் மனநிலை பாதிப்பு அதிகமாகி வந்ததை தொடர்ந்து,இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான்,தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி பூனாவிலிருந்த ஒரு மனநல காப்பகத்தில் கொண்டு சேர்த்திருந்தார் ஆப்தே.

மகன் மனநலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்த ஆப்தேயின் மனைவி அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. அவள் மனதை தேற்றவே இயலவில்லை.

ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டு ஆப்தேயின் மனைவி தினசரி சத்தம் போட்டு சண்டை போடுவது வழக்கமாகத் தொடங்கியது. மகனை பார்க்க மனைவியை மனநலக் காப்பகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழைத்து சென்றார் ஆப்தே.

அது சித்திரவதை தரும் நிகழ்வாக இருந்தது. தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுவதும், ‘ விஸிட்டிங் நேரம் ‘ முடிந்தவுடன் தாயை இறுக்கி அணைத்துக் கொண்டு அனுப்ப மறுக்கும் மகனை பலவந்தமாக பிரிப்பதும் ஆப்தேயிற்கு நரகவேதனையாக இருந்தது.

மருத்துவமனையில் உடன் இருப்பவர்கள் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என கதை கதையாக மகன் முணுமுணுத்துக் கொண்டே இருப்பதை கண்ட ஆப்தே

ஒரு கட்டத்திற்கு மேல், டாக்டர்களிடம், மகனை வெளியே விடாது வீட்டிலேயே பத்திரமாக வைத்து பார்த்துக் கொள்ளுவதாகக் கூறி அழைத்து வந்து விட்டார்.

அக்கம்பக்கத்தாரின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. அதைப் பற்றி ஆப்தே கவலைப்படவில்லை. தாயும் மகனும் ஒன்றாக இருக்கிறார்களே அது ஒன்றே போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.

தன் கணவனை ஒரு கொடிய மிருகமாகப் பார்ப்பதையாவது ஆப்தேயின் மனைவி குறைத்துக் கொண்டார். அப்போது நடந்த வேறோரு விஷயம் ஆப்தேக்கு இருந்த கொஞ்சம்நஞ்சம் நிம்மதியையும் அழித்து விட்டது. மனோரமா சால்வி தான் கர்ப்பமாக இருப்பதாக ஆப்தேயிடம் தெரிவித்தார்.

மனோரமா சால்வி வில்சன்ஸ் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார். ஆனால் பெண்கள் விடுதியில் இல்லை. பைகுலாவில் காவல்துறைக்குச் சொந்தமான ஒரு ஃப்ளாட்டில் பெற்றோரோடு இருந்தார்.

இது,மனோரமாவின் தந்தை தெளத்ராவ் சால்வே மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்த நார்த்கோட் காவல்துறை மருத்துவமனைக்கு அடுத்து அமைந்திருந்தது. B.A. கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தார்.
ஆப்தேயுடனான காதல் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகியிருந்தன.

சால்வே குடும்பத்தினர் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது,கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்கள் அக்கம்பக்கத்தினராக இருந்த ‘ மிஷினரி காம்பவுண்ட் ‘ டில் வசித்து வந்தார்கள். மனோரமா,ஆப்தேயுடனான காதலை பெற்றோரிடம் தெரிவித்தார்.

மகள் ஒரு ஹிந்துவை, அதுவும் தன் ஹிந்து மதத்திற்காக போர் குணம் கொண்டு போராடும் ஒருவனை காதலிக்கிறாள் என்பதும், அவனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்திருக்கிறாள் என்பதையும் அறிந்து அவர்கள் அதிர்ந்து போனார்கள்.

1947 அக்டோபர் மாதம் வரை ,மனோரமாவின் காதல் விவகாரம் அவர்களுக்குத் தெரியாமலேயே இருந்தது ஆச்சரியமே !

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories