ஸ்ரீரங்கம் : மன்னார்குடி ஜீயர் ஸ்வாமி மடத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் ஜீயர் ஸ்வாமியால் வழங்கப்பட்டது.
தற்போது, டெங்கு உள்ளிட்ட விஷக் காய்ச்சல் பரவும் சீஸன் என்பதால், பொதுமக்களுக்கு தகுந்த சுகாதார உதவிகள், நிலவேம்பு கஷாயம் உள்ளிட்ட இயற்கை மருந்துகள் தேவைப்படுகின்றன. இவற்றை அரசு சார் அமைப்புகள், தனிநபர்களும் பல இடங்களில் வழங்கி, பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஊட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீங்கத்தில் உள்ள மன்னார்குடி ஜீயர் மடத்தில், மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.




