நோ வெட்கம்… நோ சங்கோஜம்… மணப்பெண்ணே குத்து டான்ஸ் ஆடி.. கலக்குறாங்க! (வீடியோ)

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
dance kerala girl - 2026

திருமணத்தில் நடனமாடிய கேரள மணப்பெண் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

திருமண மண்டபத்தில் மணமகனை ஆச்சரியத்தில் ஆழ்த்த நினைத்த மணப்பெண் ஒருவர், வினோதமாக என்ட்ரி கொடுத்து விருந்தினர்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கல்யாண மண்டபத்திற்குள் சம்பிரதாய உடையில் நடனம் ஆடிக்கொண்டே வந்து அனைவர் கண்களையும் கவர்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் உள்ள கண்ணூரில் நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மணப்பெண் அஞ்சலி தன் தோழிகளோடு சேர்ந்து மலையூர் மம்பட்டியான் பட தமிழ்ப் பாட்டுக்கு நடனம் ஆடிக் கொண்டே வந்தார். நெட்டிசன்களை மிக வேகமாக ஈர்த்து வருகிறது இந்த வைரல் வீடியோ.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.