கன்னியாகுமரியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்! 14 பெண்கள் கைது!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
masaj - 2026

தங்கும் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர் உள்ளிட்ட இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த 14 கேரள பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தளமாக உள்ளது. இதனால் அங்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் வருகை புரிந்து வருகின்றனர். இதனால் அங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்களும் உள்ளன.

hottels - 2026

இந்நிலையில் தங்கும் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெற்றுவருவதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பொதுமக்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

vibacaram - 2026

புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்களில் காவல்துறையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கேரளப் பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.