பத்திரப்பதிவில் தக்கல் முறை!

Published:

registration - 2026

குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக அவசர முன்பதிவு அதாவது தட்கல் திட்டத்தை தமிழக பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய சூழலில் தமிழக அரசு அலுவலங்கங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் துறை என்றால் பத்திரப்பதிவு தான்.

தினந்தோறும் நிலங்கள் அல்லது வீட்டுமனை வாங்குவாங்குவோர்கள் பத்திரப்பதிவு செய்வதற்காக காத்திருக்கின்றனர்.

இப்படி கால தாமதம் ஆகுவதன் காரணமாகவே அவசர தேவைக்காக குறுகிய கால அவகாசத்தில் ஆவணப்பதிவு செய்ய விரும்புவோர் செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இதுப்போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கும் விதமாக தற்போது புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, குறுகிய கால அவகாசத்தில் ஆவணப்பதிவு செய்ய விரும்புவோர் ரூபாய் 5 ஆயிரம் கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளும் தட்கல் நடைமுறையைத்தான் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 பேரை அவசர முன்பதிவு செய்துக்கொள்ள பத்திரப்பதிவுத்துறை அனுமதி வழங்கவுள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

முதற்கட்டமாக, சுமார் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் அவசர முன்பதிவு திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

Related articles

Recent articles

spot_img