
பிரதமர் மோடியை விமர்சித்த காங். நிர்வாகி ஓராண்டுக்கு சமூகவலைதளத்தை பயன்படுத்த தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை விதித்தது.
பிரதமர் மோடி- சீனா அதிபர் சந்திப்பு குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய வழக்கில், ஓராண்டுக்கு சமூகவலை தளங்களை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் நிர்வாகிக்கு முன் ஜாமீன் வழங்கியது.
குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெபின் சார்லஸ்.
இவர் மீது மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர்- சீனா அதிபர் சந்திப்பு குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக வடசேரி காவல்துறையினர் தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜெபின் சார்லஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
ஜெபின் சார்லஸூக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் ஓராண்டுக்கு சமூகவலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்தார்.
இந்த நிபந்தனையை மீறினால் முன்ஜாமீனை ரத்து செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.