விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் 25 நிபந்தனைகள் அடங்கிய தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழக ஆளுநரை சந்தித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் தலைமையில் அந்த அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.
மேலும், தமிழக அரசாணையை ரத்து செய்ய வேண்டியும், விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் நடத்திட வழிகாட்டும்படியும் கோரி மனு அளிக்கப் பட்டுள்ளது.
இதே போல், மத்திய உள்துறை அமைச்சரை இந்து முன்னணி மாநிலக்குழு சந்தித்து மனு அளித்தது.
தமிழகத்தில் இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இடைஞ்சலாக திட்டமிட்டு போடப்பட்ட அரசாணை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து விளக்கி மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி
மாநில அமைப்பாளர் பக்தவத்சலம், மாநில இணை அமைப்பாளர்கள் பொன்னையா, ராஜேஷ் , ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் அகில பாரத இணை ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்றனர்.
நீண்ட நேரம் தமிழகத்தில் நடைபெறுகின்ற முக்கிய விஷயங்கள் குறித்து உள்துறை அமைச்சர் விவரங்களைக் கேட்டறிந்தார்.




