மதுரை: மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து பத்திரிக்கையாளர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர்.
மதுரையில் உள்ள மு.க.அழகிரி வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்தபோது மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்லி உள்ளனர். தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அவர்கள் விரட்டியடித்துள்ளனர்.
நேற்று சில பத்திரிகைகளில் வந்த செய்திகளில், மு.க.அழகிரி வீட்டில் ஆதரவாளர்கள் இல்லை; அழகிரி வீடு வெறிச்சோடிக் கிடப்பதாக செய்தி வெளியிடப் பட்டிருந்தது. இதனால் அழகிரி ஆதரவாளர்கள் கடுங் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் அங்கிருந்து அப்புறப் படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.




