கணவன் தந்த மருந்தை நம்பி உண்ட மனைவி! ஆனால் காட்டியது கரிசனம் அல்ல கடும் விஷம்!

சற்றுமுன்
synad - 2026

சித்தூர் மாவட்டத்தில் வரதட்சணைக்காக மனைவி சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் சயனைடு வி‌ஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து மனைவியைக் கொன்ற வங்கி அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சே‌ஷப்ப தோப்பு பகுதியில் ரவி சைதன்யா (35) – ஆமனி (27) தம்பதியர் வசித்து வந்தனர். மனைவி ஆமனியை உடல்நலக்குறைவு காரணமாக ரவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, ஆமனி கழிவறையில் மயங்கி விழுந்துக் கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததால், வீட்டிற்கு சென்று ஆமனியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாக டாக்டர்களிடம் ரவிசைதன்யா தெரிவித்திருந்தார்.

dead body - 2026

அதைத்தொடர்ந்து டாக்டர்கள் ஆமனிக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆமனி உயிரிழந்தார். இது சாதாரண மரணம் என மருத்துவர்களும், காவல்துறையினர் கருதினர். அதனால் ரவிசைதன்யா கேட்டவுடன் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை அளிக்க முன்வந்தனர்.

இதனிடையே மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ஆமனியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். வரதட்சணை கேட்டு தன் மகளை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், கொலை செய்துவிட்டு கழிவறையில் விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடுவதாகவும் புகாரில் கூறியிருந்தனர்.

tab - 2026

ஆமனியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கணவர் மற்றும் ஆமனியின் மாமியார், மாமனார் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சயனைடு பயன்படுத்தி ஆமனி இறந்திருப்பதாக டாக்டர்கள் மருத்துவ அறிக்கை கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் ரவி சைதன்யாவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

kaithu - 2026

விசாரணையில் ரவிசைதன்யா, அவருடைய மனைவி ஆமனிக்கு மருந்து மாத்திரைகளில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றதாக விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து ரவி மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.