ஆதனூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர் வடக்கு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த 10 தினங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கும் குழாயில் குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் வரும் குழாய்க்கு முன்பு அமர்ந்து பெண்கள் மற்றும் கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்!




