ராஜராஜன் காலத்தில் கம்யூனிஸ்டுகள் இருந்திருந்தால் ஒடுக்கப்பட்டோரின் நிலப்பறிப்பு கொள்கைக்கு எதிராக போராடி இருப்போம் என்று டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசப்பட்டு கத்தினார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன்
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தோன்றிய இடத்திலேயே தோற்றுப் போனவர்கள் இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் பேச்சை பாருங்க என்று பதிவு செய்திருந்தார்
தோன்றிய இடத்திலேயே தோற்றுப் போனவர்கள், இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் பேச்சை பாருங்கள் pic.twitter.com/0VAd9d40Xi
— H Raja (@HRajaBJP) June 15, 2019
ஆனால் அவரது பதிவுக்கு கீழே, கம்யூனிஸ்ட் கட்சியின் வண்டவாளங்களை, ராஜராஜ சோழன் காலத்திய மேன்மைகளை பலர் கருத்துகளாக பகிர்ந்து வருகின்றனர்
ஒருவர், அப்பல்லாம் நீதிமன்றம் விசாரணை எதுவும் கிடையாது அரசுக்கு எதிராக பேசினாலே பட்டத்து யானையை ஏவி விட்டு நசுக்கி பிதுக்கி எடுத்துடுவாங்க 2 சிறுநீரகத்தையும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்
ராஜராஜன் போல ஒரு மாமன்னன் இல்லாத காரணத்தினால் தான் அருணனை போலவும் ரஞ்சித்தை போலவும் பல தருதலைகள் மிஷனரிகள் போடும் எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அவர்கள் காட்டும் திசையில் குரைத்துக் கொண்டு திரிகின்றனர்…
ராஜராஜன் இருந்திருந்தால் உங்க முதலாளிகளுக்கு இங்கே வேலையே இருந்திருக்காது என்று ஒருவர் கருத்து இருக்கிறார்
என்ன ஒரு அறிவு சார்ந்த பதில் கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்
ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம் யாருடன் கூட்டணி மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடு அதுதானே கம்யூனிஸ்ட் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்
அப்போது இருந்திருந்தால் மதம் மாற்றும் செயலை முன்னரே ஆரம்பித்து இருப்பார் போலவே என்று ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்
இப்போது பேசுவதைப் போல் அப்போது நீங்கள் பேசி இருந்தால் அந்த மக்களே அவனைக் கொன்று இருப்பார்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் ஒருவர்
ராஜராஜசோழன் இருந்திருந்தால் நம்மிடம் பேசிக் கொண்டிருக்க மாட்டார் கழுவில் ஏற்றி இருப்பார்




