
தமிழகத்திலியே முதன் முறையாக திருநங்கை ஒருவரை முதுகலை நாட்டுப்புறவியல் படிப்பில் 50 சதவீத கட்டண சலுகையுடன் மதுரை காமராஜா் பல்கலை கழகம் சேர்த்துக் கொண்டுள்ளது.
திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் இல்லாத நமது சமுதாயத்தில் இன்னும் கிடைக்கவில்லை, ஆகவே அவா்கள் வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு இது தடையாக உள்ளது.
அதனை கடந்து. தனது கனவை நனவாக்கிட வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதுகலை நாட்டுப்புற வியல் பாடப்பிரிவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேரந்த திருநங்கை வர்ஷா, சேரந்துள்ளார்.
.
மூன்றாம் பாலினத்தோரும் உயா்க்கல்வி பெற பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கனவே வழிவகை செய்துள்ளது, இருந்தாலும் பெற்றோர் மற்றும் சுற்றத்தார், சமூகத்தாரின்
ஆதரவு இல்லாத ஒரே காரணத்தால், பல திருநங்கைகள் தங்களின் வாழ்க்கை கனவை நோக்கி பயணிக்க முடிவதில்லை,
வா்ஷாவின் வெற்றி பயணத்திற்கு மதுரை காமராஜா் பல்கலைக்கழகமும் ஒரு முக்கிய காரணம் அது மிகையில்லை..
வா்ஷாவை மாணவியாக சேர்த்துக் கொண்டது மட்டுமின்றி, அவரை ஊக்குவிக்கும் விதமாக கல்வி கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் வழங்கியுள்ளது.
இதனால் வர்ஷா எல்லையில்ல மகிழ்ச்சியில் திழைத்து வருகிறார்.
தனக்கு பிடித்த நாட்டுப்புறவியலை படிப்பது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பாடுபடுவேன் இதுவே எனது வாழ்வின் லட்சியம் என கூறினார். உள்ளதாக கூறுகிறார்.



