சந்திரபாபுவுக்கு ‘தெலுகு தல்லி’ சாபம்…. முன்னாள் எம்பி செய்த விமர்சனம்….
முன்னாள் ராஜ்யசபா மெம்பரும் பிரபல இலக்கியவாதியுமான ‘யார்லகட்ட லக்ஷ்மி பிரசாத்’ சந்திரபாபுவின் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்தது பற்றி சுவையாக தன் அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தோல்விக்கு காரணங்கள் என்ன என்பதை பற்றி அரசியல் வட்டாரத்தில் பலவித விவாதங்கள் நடந்து வருகின்றன. புதிதாக முன்னாள் rajya sabha மெம்பரும் பிரபல இலக்கியவாதியுமான ‘யார்லகட்ட லட்சுமி பிரசாத்’ சந்திரபாபுவின் தலைமையில் இருக்கும் டிடிபி ஏன் தோல்வி அடைந்தது என்பதற்கான சுவையான காரணத்தை கூறியுள்ளார்
சந்திரபாபு முதல்வராக இருந்தபோது தெலுங்கு மொழியின் முன்னேற்றத்திற்காக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை அதனால் தெலுகு தல்லி சாபம் அளித்து விட்டாள். அதனால் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியைத் தழுவியது என்றார் விசாகப்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்
புதிய முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துள்ள செயல்பாடுகளை புகழ்ந்தார்
எல்லா பள்ளிகளிலும் தெலுகு மொழியை கட்டாயமாக்குவதாக ஜெகன் கூறியுள்ளது நற்செய்தி என்று வரவேற்றார். தெலுங்கு மொழி வளர்ச்சிக்காக ஜெகன் செய்துவரும் முயற்சியை பாராட்டினார்
மேலும் அந்த சந்தர்ப்பத்தில் தெலுகு விஷ்வ வித்யாலயம் தெலுகு அகாடமி இவற்றை இரண்டாகப் பிரிப்பதை துரிதப்படுத்துமாறு இரு மாநில அரசாங்கங்களை கேட்டுக் கொண்டார்.




