ஜெகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஏழைகளின் சொந்த வீடு திட்டத்திற்காக 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக அளித்தார் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர்!
ஏழைகள் வீட்டு வசதி திட்டத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசாங்கத்திற்கு நன்கொடையாக அளிக்க ஒரு என் ஆர் ஐ பெண்மணி முன்வந்துள்ளார்!
மேற்கு கோதாவரி மாவட்டம் ‘பெனுமண்ட்ர’ மண்டலம் ‘குர்வு’ கிராமத்தை பூர்வீகமாக கொண்ட என்ஆர்ஐ பெண்மணி “படால கஸ்தூரி” என்பவர் இந்தக் கொடையை அளிக்க முடிவு செய்துள்ளார்.
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த நவரத்தினா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏழைகளின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதற்கு கஸ்தூரி தன் 1.10 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளிக்கிறார்.
மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் “செரு குவாட ஸ்ரீரங்கநாதராஜு” உற்சாகப் படுத்தியதால் இந்த நிலத்தை அளிப்பதற்கு அவர் முடிவெடுத்தார். லண்டனில் இருந்து வந்துள்ள கஸ்தூரியை அமைச்சர் பாராட்டினார்.





God bless her family. Dravidian parties can learn from her