தவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்! சினிமா ஷூட்டிங்கில் சோகம்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

telugu cine shoot - 2026

தெலுங்கு திரைப்படம் தெனாலி ராமகிருஷ்ணா சூட்டிங்கில் பாம் வெடித்து ஹீரோ சந்திப் கிஷனுக்கு பலத்த காயம்.

டோலிவுட் ஹீரோக்களை ஷூட்டிங் விபத்துகள் துரத்துகின்றன. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், வருண் தேஜா என்று வரிசையாக காயம் பட்டார்கள்.

ஜூன் 14 இரவு நாக சௌரியாவுக்கு ஷூட்டிங்கில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளது.. புதிதாக ஹீரோ சந்தீப் கிஷன் சனிக்கிழமை ஜூன் 15 நேற்று காயமடைந்து உள்ளார் .

சந்தீப் கிஷன் ஹீரோவாக ஜி நாகேஷ்வர ரெட்டி இயக்கத்தில் தயாராகி வரும் படம் தெனாலி ராமக்கிருஷ்ணா. கர்னூலில் படப்பிடிப்பு நடந்து வரும்போது சண்டை மாஸ்டர் செய்த சிறிய தவறால் ஹீரோ காயமடைந்தார்.

சண்டையில் ஒரு பகுதியாக பாம் வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. பாம் ஜஸ்ட் மிஸ் ஃபயர் ஆனதால் சந்திப் கிஷனுக்கு நெஞ்சிலும் வலது கையிலும் கண்ணாடித் துண்டுகள் பாய்ந்தன!

உடனே கர்னூலில் மை க்யூர் ஹாஸ்பிடலில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்!

தெனாலி ராமகிருஷ்ணா திரைப்படம் தொடர்பாக கர்னூலில் ஷூட் செய்து வரும் ரிஸ்க் ஷாட்ஸ் சிலவற்றின் வீடியோவை சில மணி நேரம் முன்புதான் ட்விட்டரில் போஸ்டர் செய்தார் சந்தீப் கிஷன்! இப்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.