மிஸ் இந்தியா அழகியாக சுமன் ராவ் தேர்வு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

miss india suman rao - 2026ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடும் ஒரு அழகியை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் நடப்பு ஆண்டுக்கான இந்தியா அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் வெற்றி வாகை சூடினார்.

இவரைத் தொடர்ந்து, தெலங்கானாவின் சஞ்சனா விஜ் மிஸ் இந்தியா ரன்னர் அப்பாக தேர்வாகியுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் தாய்லாந்தில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ராவ் பங்கேற்பார்!

miss india - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.