டயர் வெடித்து லாரியில் மோதிய கார்! பேராசிரியை உயிரிழப்பு!

தமிழகம் பொது தகவல்கள்
car 1 1 - 2026

ஞானராஜ்- ஜோஸ்மின் மேரி என்னும் தம்பதி மதுரையில் வசித்து வருகின்றனர். ஜோஸ்மின் மேரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இரண்டு பேரும் திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் நிலைதடுமாறி கார் தறிகெட்டு சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதியுள்ளது.

car 2 - 2026

காரை ஓட்டிச்சென்ற ஞானராஜ் காரை கட்டுப்படுத்த முயற்சி செய்தும், எந்த முயற்சியும் பலனலிக்கவில்லை. டயர் வெடித்ததில் வேகமாகச் சென்ற கார் சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விபத்தில் பலத்த காயம் அடைந்த இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

car 1 - 2026

இருப்பினும் பேராசிரியை ஜோஸ்மின் மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஞானராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.