
தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் ஏடிஎஸ்பிக்கள் வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், சுஜாதா, வனிதா, கோபி, இளங்கோ, முகிலன் உள்ளிட்ட 17 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் ஆணை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் விழுப்புரம், கடலூரை சேர்ந்த 19 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று காவல் கண்காணிப்பாளர்கள் 17 பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



