இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். பயிற்சியில் பும்ரா பந்து வீச்சின் போது பெருவிரலில் காயம் அடைந்த விஜய் சங்கர் அணியில் இடம் பெற்றார்.
ரோகித் சர்மா (1), லோகேஷ் ராகுல் (30) நிலைக்கவில்லை. விஜய் சங்கர் 29 ரன் எடுக்க, கேப்டன் கோஹ்லி 67 ரன் எடுத்தார். தோனி 28, பாண்ட்யா 7 ரன் எடுத்து அவுட்டாகினர். கேதர் ஜாதவ், தனது 6வது அரைசதம் எட்டினார். கடைசி ஓவரில் முகமது ஷமி (1), கேதர் ஜாதவ் (52) அவுட்டாகினர். இந்திய அணி மொத்தமாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. பும்ரா (1), குல்தீப் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான்.



