கருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும். பெரியவாளின் கருணையும்!

” கருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும்-.பெரியவாளின் கருணையும்”

(இதெல்லாம் வேற எங்கேயாவது இருக்கறச்சே வேணும்னா நடக்கலாம். ஆனா பரம வைத்தியரான மகாபெரியவா இருக்கற இடத்துல விஷத்துக்கு என்ன வேலை! )

நன்றி- குமுதம்.பக்தி(இவ்வாரம் வந்தது)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்.
18403116 1556446661067160 1497124748506696567 n - 2026
சற்று சுருக்கப்பட்டது

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு சமயம் மகானை தரிசிக்கறதுக்காக குடும்பத்தோட ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் ஹாலாஸ்யர் .வழக்கத்தை விட அன்னிக்கு கூட்டம் நிறையவே இருந்தது .வந்திருந்தவா எல்லாரும் கொண்டுவந்து குடுத்துண்டு இருந்த கனிவர்க்கம்,புஷ்பம்னு பலதும் மூங்கில் கூடைகளில் நிறைஞ்சு இருந்தது.

கொஞ்சம் வெயில் அதிகமான நாள் அது.ஆனா மடத்துக்குள்ளே சந்திரசேகரர் இருக்கறச்சே அங்கே வெம்மை என்ன செஞ்சுடும்? அதோட அவரோட கருணை மழையும் வற்றாமப் பொழிவதால் மடத்துக்குள்ளே, அதுவும் குறிப்பா மகாபெரியவா அமர்ந்து அனுகிரஹம் செஞ்சுண்டு இருந்த இடத்தை சுத்தி குளுமையா தான் இருந்தது.

பக்தர் கூட்டம் மெதுவா நகர்ந்து ஒவ்வொருத்தரா பெரியவாளை தரிசிச்சு நமஸ்காரம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுண்டிருந்தா. வரிசைல வந்து ஹாலாஸ்யரடோ முறை வந்தது.

நமஸ்காரம் பண்ணறதுக்கு முன்னால காணிக்கையா கொண்டு வந்திருந்ததை எல்லாம் மகான் முன்னால சமர்ப்பிச்சுடலாம்னு குனிஞ்சு எல்லாத்தையும் அங்கே இருந்த மூங்கில் தட்டில வைச்சார். .

அப்போதான் அந்த பயங்கரம் நடந்தது. வெயிலோட கடுமைக்கு பயந்து,மகாபெரியவா அண்டையில் இருந்த குளுமையைத் தேடி அங்கே இருந்த ஏதோ ஒரு மூங்கில் தட்டுக்கு அடியில ஒளிஞ்சுண்டு இருந்த கருந்தேள் ஒண்ணு வேகவேகமா வெளியில் வந்து, பக்தர் ஹாலாஸ்யரோட கையில பொட்டுன்னு கொட்டித்து.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அவ்வளவுதான்..அப்படியே துடிச்சுப் போனார் அவர். இதுக்குள்ளே சுத்தி இருந்தவா பலரும் தேள் தேள்னு அலற ஆரம்பிச்சா.

சாதாரணமா தேள் கொட்டினா விறுவிறுன்னு கடுக்கும். விஷம் மளமளன்னு பரவத்தொடங்கும் விரல்..கை..ன்னு பரவி மயக்கம் வரைக்கும், கொண்டுபோய்த் தள்ளிடும்.அதுவே கருந்தேள்னா கேட்கவே வேண்டாம்.விஷத்தோட வீர்யம் ரொம்பவே அதிகமா இருக்கும்.சில சமயம் உசுருக்கேகூட ஆபத்து வந்துடலாம்.

ஆனா இதெல்லாம் வேற எங்கேயாவது இருக்கறச்சே வேணும்னா நடக்கலாம். ஆனா பரம வைத்தியரான மகாபெரியவா இருக்கற இடத்துல விஷத்துக்கு என்ன வேலை!

தேள்கொட்டின வலியில,கையை உதறிண்டு கத்தவும் முடியாம,தாங்கவும் முடியாமத் தவிச்ச ஹாலாஸ்யரை மென்மையாகப் பார்த்தார் மகாபெரியவா….”என்ன! தேள் கொட்டிடுத்தா? ஆமா, தேள் கொட்டினா வலி எப்படி இருக்கும்?” எதுவும் அறியாதவர் மாதிரி கேட்டார்.

ஹாலாஸ்யர் தவிக்க யாரோ சொன்னா..

“தேள் கொட்டித்துனா, ரொம்ப வலிக்கும் .தாங்கவே முடியாம விஷம் ஏறிக் கடுக்கும் .சிலசமயம் மயக்கம் கூட வந்துடும் பெரியவா!”

“நீ சொல்லாதே..அவன் சொல்லட்டும்..தேள் கொட்டின வலி ரொம்ப அதிகமா இருக்கா?இல்லை எறும்பு கடிச்ச மாதிரி இருக்கா?”-பெரியவா

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

மகான் கேட்க, அதுவரைக்கும் வலி அதீதம்னு தவிச்சுண்டு இருந்த ஹாலாஸ்யர், “அப்படியே ஒரு நிமிஷம் அமைதியா நின்னார்.அவருக்குள்ள ஏதோ ஒரு உணர்வு ஓடினது. அவரோட முக பாவத்துலயே புரிஞ்சுது.

அவர் மனசுக்குள்ள எழுந்த எண்ணம் இதுதான்…’தேள் கொட்டினது நினைவிருக்கு ,வலிச்சதுன்னு கையை உதறிண்டு தவிச்சது ஞாபகம் இருக்கு. ஆனா இப்போஅந்த வலி எங்கே போச்சு? ஒண்ணும் புரியாம திகைத்தார். மகாபெரியவாளைப் பார்த்தார்

“பெரியவா எனக்கு ஆச்சரியமா இருக்கு. வலி எப்படி இருக்குன்னு நீங்க கேட்கற வரைக்கும் அதீதமா வலிச்சமாதிரி இருந்தது. ஆனா எறும்பு கடிச்சமாதிரி இருக்கான்னு நீங்க கேட்டதும் வலியோட கடுமை சட்டுனு குறைஞ்சு ஏதோ பிள்ளையார் எறும்பு ஊறின மாதிரியான உணர்வுதான் இருக்கு! வலி போன இடம்

தெரியலை…எல்லாம் உங்க அனுகிரஹம்” தழுதழுப்பாச் சொன்னார்.

“நீ அப்படியா சொல்றே? ஆனா நான் எதுவுமே பண்ணலை..நீதான் தேள் உன் கையில் ஊறினதுமே அது கொட்டிடுத்துன்னு நினைச்சுண்டு பயந்துபோயிட்டே போல இருக்கு.நான் கேட்டதுமே யோசிச்சிருக்கே..

கொட்டலைன்னு புரிஞ்சதும் வலி போயிடுத்துன்னு சொல்றேன்னு எனக்கு தோணறது”-பெரியவா

எல்லாம் வல்ல சித்தர் மாதிரி எல்லாத்தையும் செஞ்சுட்டு, தான் எதுவுமே பண்ணலைன்னு சொல்லிண்ட மகாபெரியவாளோட மகிமையை நினைச்சு,அந்த சிலிர்ப்போட அவர் திருவடியில விழுந்து நமஸ்காரம் செஞ்சார் பக்தர்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

கை நிறைய விபூதியைக் குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார் மகாபெரியவா. அதை வாங்கி நெத்தியில் இட்டுண்டு,தேள் கொட்டின இடத்துலையும் தடவிண்டார் பக்தர்.எறும்பு கடிச்சமாதிரி இருந்த வலியும் அதுக்கு அப்புறம் அவருக்கு இல்லவே இல்லை.

பக்தர் பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்ததும்,ஒரு அணுக்கத் தொண்டரை அழைத்து பெரியவா. .”இதோ பார் இதை (தேள்) ஒரு மூங்கில் தட்டத்துல பிடிச்சுண்டுபோய் வெளீல எங்கேயாவது புதர் நிழலில் விட்டுட்டு வா

..பாவம் வெயிலுக்கு பயந்துண்டு இங்கே ஒதுங்கிண்டு இருக்கிறது!ன்னு, சொன்னதுதான் மறுபடியும் எல்லாருக்கும் தேளோட ஞாபகமே வந்தது.

“வெயிலா இருக்கற எடத்துல விடலையே. ஓரமா நிழல்தானே விட்டுட்டு வந்தே!” மகான் இப்படிக் கேட்டதும், மனுஷாகிட்டே மட்டும்னு இல்லாம,சகல ஜீவராசிகள்கிட்டேயும் அவர் வைச்சுண்டிருந்த் கருணைக்கும் அன்புக்கும் சாட்சி. அந்த சமயத்துல அங்கே இருந்தவாளும் ,அப்போ பெய்ஞ்ச மழையும்தான் ,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories