கடலூரில் ரசாயன ஆலை! வெளிநாட்டு நிறுவன தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Published:

eps 1 - 2026

ஐம்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் ரசாயன ஆலை நிறுவுவது தொடர்பாக, வெளிநாட்டு நிறுவனத் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

eps 4 - 2026

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

eps 3 - 2026

அமெரிக்காவில் ஹெல்டா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 50,000 கோடி ரூபாய் முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைப்பது குறித்து, அதன் நிறுவனத் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணைத்தலைவர் ராபின் முகோபாத்யாய் ஆகியோருடன் முதலமைச்சர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

eps 2 - 2026

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img