தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கேடேஷ் பணியிட மாற்றம் செய்யப் பட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு மாற்றப் பட்டுள்ளார். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய காவல் கண்காணிப்பாளராக முரளி ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக உள்ள வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக உள்ள மகேந்திரன், சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக உள்ள சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.




