அந்த ஒரு நிமிட சதி! மாறியது விதி!

இந்தியா கட்டுரைகள் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
IMG 20200305 WA0016 - 2026

ஒரு நிமிடம் லேட்… மாறியது ஃபேட்.

இன்டர்மீடியட் தேர்வுகள் ஒரு நிமிட கால தாமதத்தைக் கூட பொறுக்காத காரணத்தால் தேர்வு எழுத முடியாமல் போன பல மாணவர்கள்.

தெலங்காணாவில் இன்டர் தேர்வுகள் தொடங்கிவிட்டன. மாநில அளவில் உள்ள 1339 தேர்வு மையங்களில் இன்டர் முதலாம், இரண்டாம் ஆண்டுகளைச் சேர்ந்த 9.25 லட்சம் மாணவர்கள் பரிட்சை எழுத உள்ளார்கள். நேற்று மார்ச் 4 இண்டர் முதல் ஆண்டு தேர்வுகள் தொடங்கின.

இன்றிலிருந்து இரண்டாம் ஆண்டு பரீட்சை தொடங்க உள்ளன.

காலை 8 45 மணிக்குள் தேர்வு அரங்குக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் பல மாணவர்கள் ஓட்டமும் நடையுமாக எட்டு மணிக்கே சென்டர் அருகில் வந்து குவிந்தார்கள். ஆனால் இந்த எட்டே முக்கால் என்ற நிமிட நிபந்தனையாலும் பிற காரணங்களாலும் பல இடங்களில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனார்கள்.

ராஜன்ன சிரிசில்ல மாவட்டத்திலுள்ள வேமுலவாடாவில் ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காக வென்னெல ராஜேஸ்வரி என்ற மாணவியை போலீசார் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை.

பெத்தபல்லி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் ஜூனியர் கல்லூரி சென்டரில் மூன்று மாணவர்களை இன்டர் தேர்வுகள் எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை. ஹால் டிக்கெட் இல்லாமல் வந்ததாக 2 மாணவர்களையும் ஒருவர் ஒரு நிமிடம் தாமதமாக வந்ததாலும் அதிகாரிகள் அவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை. அதனால் இவர்கள் மூவரும் திரும்பிச் செல்ல வேண்டி வந்தது.

யாதாத்ரி புவனகிரி ராமன்னபேட்டையில் இன்டர் முதலாண்டு படிக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவர்கள் சென்டர் அருகில் தாமதமாக வந்ததால் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படவில்லை. இவர்களில் மூவர் ராஜம்பேட்டை அரசுக் கல்லூரியிலும் ஒருவர் நலந்தா கல்லூரியிலும் படித்து வருகிறார்கள்.

நிஜாமாபாத் மாவட்டத்தில் இரு மாணவர்கள் தேர்வை நழுவ விட்டார்கள். அவர்களில் நிஜமாபாதைச் சேர்ந்த கணேஷ் என்ற மாணவர் சென்டரின் பெயர் ஒரே மாதிரி இருந்ததால் குழப்பத்தில் வேறொரு சென்டருக்கு போய் விட்டார். அதனால் அதிகாரிகள் அவரை வெளியே அனுப்பி விட்டார்கள்.

அதேபோல் பால்கொண்ட அரசு ஜூனியர் கல்லூரி மாணவி அனிதா 10 நிமிடங்கள் லேட்டாக வந்ததால் அதிகாரிகள் தேர்வு ஹாலுக்குள் அனுமதிக்கவில்லை.

தேர்வு எழுதும் முதல் நாள் என்பதால் மாணவர்கள் தேர்வு மையத்தைத் தேடி வந்தடைய தாமதமாகி இருக்கிறது. முதல் நாளாவது கொஞ்சம் விதிகளை தளர்த்தி இருக்கலாம் என்று பெற்றோர் வருத்தத்தோடு தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.