இந்த நாட்டை நேசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள் :
இணையத்தில் தேசத்திற்கு எதிராகக் கருத்துக்களை பரப்புபவர்களை எப்படி ஒடுக்குவது?
இந்தத் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் முன்வந்து செய்ய வேண்டிய ஒரு முக்கியமான கடமை ஒன்று உள்ளது என்றால் அது இது தான்! “தேசவிரோத சக்திகளை அழித்தொழிக்க அரசுக்கு உதவுவது”.
நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த விதமான ஆட்களைச் சிறைக்கு அனுப்பவேண்டும். இல்லை குறைந்தபட்சம் வேலை பார்க்கும் இடத்திலிருந்து தூக்க வேண்டும். அப்போதுதான் இங்கே இவனுக கொஞ்சமாது அவதூறு பரப்பாமல் இருப்பார்கள். முக்கியமாக IT துறையில் வேலை பார்ப்பவர்களில் சிலர் தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களை பரப்புகிறார்கள்.
நாம் இப்போது இவர்களை இரண்டாகப் பிரித்து ஒடுக்க வேண்டும்…
I)உள்நாட்டில் இருந்து கொண்டு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பும் நபர்களை எப்படி சிறைக்கு அனுப்புவது. இல்லை வேலையை விட்டு நீக்குவது?
1.Facebook , Whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவுகள் , அந்த நபரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவேண்டும். {அவர்களால் பரப்பப்படும் கருத்துக்கள் 1ஆண்டு பழையவை என்றாலும் தேடி எடுத்து ஆதாரத்தைத் திரட்டுங்கள்.}
2.அந்த குறிப்பிட்ட நபர் வேலை செய்யும் அலுவலகம் சார்ந்த விவரம் தெரியும் என்றால் – அந்த அந்த நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகள் – நிறுவனத்தின் தலைவர்கள் , நிறுவன மேலாளர் என்று அனைவருக்கும் Email மூலம் புகார் அனுப்புங்கள். {புகாரில் தேசவிரோத நடவடிக்கை ஈடுபட்டுள்ள அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நேரடியாகப் புகார் பிரதமர் அலுவலகம் அனுப்பப்படும் என்று கட்டாயம் குறிப்பிடவும்.}
3.கொடுக்கப்பட்ட Email புகாருக்கு 20நாட்கள் உள்ளாக எந்த விதப் பதிலும் இல்லை என்றால் – அந்தப் புகாரை அப்படியே பிரதமர் தனிப்பிரிவுக்கு அனுப்பவும். அதற்கு https://pgportal.gov.in/என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும்.Centralized Public Grievance Redress And Monitoring System (CPGRAMS) உங்கள் புகாரினை சரியான முறையில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும். இது முதல் வேலை.
{ஒருத்தனுக்கு வேலை போனால் கூட அவனால் 100பேர் இல்லை 1000பேர் திருந்துவான். எனவே இது முக்கியமான முயற்சி}
இரண்டாவது…
II)வெளிநாடுகளில் இருந்து கொண்டு தேசவிரோத கருத்துக்களை பரப்பும் நபர்களை எப்படி ஒடுக்குவது?
1.Facebook , Whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவுகள் , அந்த நபரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவேண்டும்.
2.அந்த அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்குப் புகாரினை Email செய்யவும். எடுத்துக்காட்டுக்குச் சிங்கப்பூரில் இருந்து ஒரு நபர் இந்த விதமாக நடவடிக்கைகளை ஈடுபடுகிறார் , தொடர்ந்து நாட்டுக்கு எதிராகக் கருத்துக்களை பரப்புகிறார் என்று தெரிய வரும் நபரைப் பற்றி https://www.hcisingapore.gov.in/ என்ற இணையதளத்தில் கிடைக்கும் அதிகாரிகள் Email Idக்கு புகாரினை அனுப்பவும். {ஆதாரத்துடன் அனுப்பவும்}
3.கொடுக்கப்பட்ட Email புகாருக்கு 30நாட்கள் உள்ளாக எந்த விதப் பதிலும் High Commission of India விடம் இருந்து இல்லை என்றால் – அந்தப் புகாரை அப்படியே பிரதமர் தனிப்பிரிவுக்கு அனுப்பவும். அதற்கு https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும். {உங்கள் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு அனுப்பவும்)
மேலே கூறிய இரண்டு வழிகளும் எந்த வித பிரச்சனையும், தொந்தரவும் உங்கள் யாருக்கும் வராது. கொஞ்சம் நாட்டிற்காகச் செய்யவும். {உங்கள் அலுவலகத்தில் உங்கள் அருகில் கூட அந்த நபர் இருக்காலம் தயவு கூர்ந்து அவர்கள் மீது எந்தவித பற்றும் கொள்ளாதீர் – அவர்கள் செய்வது ஆக மோசமான தேசவிரோத செயல். அதை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் இந்தத் தமிழ் நாடு பெரும் கேடு வந்து சேரும். எனவே புகார் அளிக்கத் தயக்கம் வேண்டாம்.}
ஒரு குழுவாக இயங்க முடியும் என்றால் :
போலிஸ் நிலையத்திற்குப் புகார் அளிக்க முன்வாருங்கள். நீங்கள் அந்த அந்த மாநிலங்களில் இருக்கும் Cyber Crime பிரிவுக்கு இந்த விதமாக தேசவிரோத நபர்களைப் பற்றிய தகவல்கள் அனுப்பலாம்.
தமிழ்நாட்டில் https://www.tnpolice.gov.in/CCTNSNICSDC என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி Online புகாரினை அனுப்பவும்.
மிக முக்கியம் நீங்கள் இந்த விதம் புகார்களை கொடுத்துவிட்டு வலைத்தளங்களில் தகவல்களை வெளியிடத் தேவை இல்லை. மறைமுகமாகவே நீங்கள் இதைச் செய்தாலே போதும். இங்கே எங்களால் முடிந்த வேலையைக் கடந்த 2 மாதங்களாகச் செய்கிறோம்.
100% உங்களுக்கு எந்த பதிப்பும் இதனால் வராது. அதற்கு நான் உறுதியளிக்கிறேன். ஏதும் உதவி என்றால் நான் வருகிறேன். தயவு கூர்ந்து தேசத்தை காப்பாற்ற முன்வாருங்கள்.
கொஞ்சம் புத்திசாலித்தனமாக நாம் செயல்பட்டால் போதும் இங்கே அமைதியை மீண்டும் உருவாக்கிவிட முடியும்.
கருத்து: – மாரிதாஸ்




