615 June27 MBBS Rank list - 2026மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

மருத்துவ படிப்புகான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2,593 காலி இடங்கள் உள்ளன. மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை சுமார் 43,935 விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டு வந்துள்ளன. மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மேலும், இதற்கான கலந்தாய்வு ஜூலை மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் மட்டும், மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரம் பொறியியல் காலி இடங்கள் உள்ளன. இந்த வருடம் முதல் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், நாளை பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வுக்காக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending