நாம் ஓட்டு போட்டது அரசியல்வாதிகளுக்கு: தோனிக்குக் கிடையாது. ஆர்.ஜே.பாலாஜி

rj balaji - 2026சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்துவதன் மூலம் காவிரி பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே பாலாஜி சாட்டையடி கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

‘காவிரி மேலாண்மை வாரியம அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், இன்று ஐபிஎல் மேட்ச்சில் நான் செய்ய வேண்டிய என் வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக என் பங்களிப்பு இது. இந்த முடிவை நான் சார்ந்திருக்கும் நிர்வாகத்திற்கு சொல்லும்போது என் உணர்வுக்கும், என் மக்கள் உணர்வுக்கும் மதிப்பளித்தனர். அவர்களுக்கு என் நன்றி.

இந்த நேரத்தில் சில விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். ஐபிஎல் மேட்ச் நாம் பார்க்கக்கூடாது என்று கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னார்கள். பிறகு, மைதானத்தில் பார்க்க வேண்டாம், டிவியில் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு ஐபில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட வேண்டும் என்றார்கள். இப்போது ஐபிஎல் போட்டியே நடக்கக்கூடாது என்கிறார்கள். மேலும், போட்டி நடக்கிறதோ, இல்லையோ என்னை மாதிரி ஆட்கள் அதில் வேலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இது எல்லாமே எதற்கு என்றால் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். இது சரியா என்ற கேள்வி எழுகிறது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

ஏனென்றால், இப்போதிருக்கும் நிலைமை பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரியாதா? அப்படியே கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றாலும் 234 எம்.எல்.ஏக்களையும், 40 எம்.பி.க்களையும் ஓட்டு போட்டு அனுப்பி வைத்திருக்கிறோம். அதனால், நாட்டின் மொத்த கவனத்தையும் பெற வேண்டுமென்றால் 234 எம்.எல்.ஏக்களும், 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்யலாம். எல்லோருமே ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று திரும்பிப் பார்ப்பார்கள்.

உடனே தேர்தல் அறிவிப்பார்கள் என்றால், அந்தத் தேர்தலில் யாரும் நிற்காதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால் அது சரியாக இருக்கு. ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்குத்தான். தோனிக்குக் கிடையாது.

நான் தனிமனிதனாகவும், என் நண்பர்களுடன் இணைந்தும் திருநெல்வேலி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 ஏரி, குளங்களைத் தூர் வாரி இருக்கிறோம்.

சிலர் ஆதாயத்துக்காக இதைப் பெரிதாக்குகிறார்கள். அதற்காக இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு தீர்வை நோக்கிப் போராட வேண்டும்”

இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories