ஆரோக்கிய உணவு: மூங்தால் இட்லி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
pasi sundal - 2026

மூங்தால் இட்லி

தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1/2 கப்
தயிர் – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சித் துண்டுகள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1தேக்கரண்டி
கடுகு – 1தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு – 3
கேரட் – துருவியது – 1/2 கப்
கொத்தமல்லி இலை -2 மேசைக்கரண்டி பொடி நறுக்கியது
உப்பு – தேவையானஅளவு

moongh dhall idly - 2026

செய்முறை:
பாசிப்பருப்பை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பாசிப்பருப்பை தண்ணீரை வடிகட்டி மிக்சியில் மாவாக அரைக்கவும்.

தேவையான மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

மாவில் தயிர் சேர்க்கவும்.

கடுகு, சீரகம் தாளித்து முந்திரிப் பருப்பு, இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கேரட் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

வதக்கிய கலவையை மாவில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும். பின்னர் எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் ஊற்றி வேக வைக்கவும்.

ஏழு முதல் எட்டு நிமிடங்களில் பாசிப்பருப்பு இட்லி வெந்து விடும். சூடான பாசிப்பருப்பு இட்லியை புதினா சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.