கார்த்திகை முதல் சோம வாரம்! குற்றாலம் அருவியில் பெண்கள் புனித நீராடல்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
IMG 20191118 WA0008 - 2026

திருக்குற்றாலம் அருவியில் இன்று கார்த்திகை சோமவார விரதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் வந்திருந்தனர்

குற்றாலம் அருவியில் புனித நீராடி அருவிக்கு முன்னுள்ள விநாயகர் ஆலயத்தில் பூஜைகள் செய்வது வழக்கம்

இன்று கார்த்திகை முதல் சோமவார விரதத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பெண்கள் புனித நீராடி விநாயகரை வழிபட்டனர். இதை முன்னிட்டு திரு குற்றாலம் அருவியில் பெண்கள் மட்டுமே குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது …

கார்த்திகை மாத மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இதனால் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் .. பெண்களுக்கு பாதுகாப்பாக பெண் போலீசார் யாரும் அருவிக்கரையில் இல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.