உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு 24-ஆம் தேதி வெளியாகும்?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
election comission - 2026

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக அண்மையில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை பகுதிக்குச் சென்ற மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் அப்போது ஆலோசனை மேற்கொண்டார்

தேர்தல் செலவுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஆட்சியர்கள் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையர் பழனிசாமி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மாநில தேர்தல் ஆணைய செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கூட்டத்தின் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேதி, முடிவு அறிவிக்கும் தேதி போன்றவை இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது

எனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் 24ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.