சமூக வலைதளங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையவழி குற்றங்கள் தொடர்பாக டெல்லியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “இன்டர்நெட் வழியாக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்றும், சிறார்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இன்டர்நெட்டில் வெளியிடப்படுவது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதனை தவறாக பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்றும், இதனை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்படும். மொபைல் வழி, இன்டர்நெட் வழி நிதி மோசடி குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.




