தன்னைக் குறித்து விஷமமான வீடியோ:
எம் எல் ஏ சந்திரசேகர் புகார்
போலீசாரை தாக்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோவில் இருப்பது நான் அல்ல அதை வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம் எல் ஏ சந்திரசேகர் போலீசில் புகார் அளித்துள்ளார்
இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று அவர் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக நான் இருக்கிறேன். என்னைக் குறித்து சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளனர். அதில் வேட்டி கட்டி இருக்கும் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது திடீரென அந்த நபர் போலீஸ்காரரை காலால் எட்டி உதைக்கிறார். அந்த நபர் நான்தான் என்று மர்ம நபர்கள் வீடியோ வெளியிட்டு திமுகவுக்கும் எனக்கும் களங்கம் கற்பிக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சந்திரசேகர் குறிப்பிட்டுள்ள அந்த வீடியோ…