கொத்தடிமைகளாம்! கூடங்குளத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்!

தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
kudankulam
kudankulam

தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதாகக் கூறி, வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்த பணியாளர்கள் எல் & டி நிறுவனத்தில் பணி செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட நிவர்த்தி செய்து கொடுக்காமல் தங்களை கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டு வருவதாக புகார் கூறினர்.

இதனைக் கண்டித்து தங்களுடைய தொழிலாளர் குடியிருப்பைக் கடந்து, கூடங்குளம் அணுமின் நிலையம் மெயின் கேட்டில் வந்து பெட்டி படுக்கையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

அவர்களை அணுமின் நிலைய அதிகாரிகள் வெளியில் செல்லவிடாமல் தடுத்து சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். கூடங்குளம் காவல் ஆய்வாளர் மற்றும் இராதாபுரம் தாசில்தார் இந்த சமரச பேச்சில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

கூலித் தொழிலாளர்களை அதிகாரிகள் தொடர்ந்து அடிமைகளாக நடத்தி வேலை வாங்குவதாக அவர்கள் கூறினர். எனினும் தங்களது அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் புறக்கணிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.