
தமன்னா நடிப்பில் அதே கண்கள் பட இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கும் படம் பெட்ரோமாக்ஸ். இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை தமன்னாவுடன் இணைந்துள்ளது.
இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கபடி குழு கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது.
அக்டோபர் 11-ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.
The wait is over… #PetromaxTrailer out now. Go watch it! #PetromaxFromOct11
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) September 30, 2019
@EaglesEyeProd @rohinv_v @iYogiBabu @kaaliactor @tsk_actor @premkumaractor @GhibranOfficial @DaniRaymondJ @meevinn @agscinemas @onlynikil @DoneChannel1 @thinkmusicindia https://t.co/0Hmee1EbaE



