விஜய் இயக்கிய தேவி திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த ஜோடி ராசியான திரைஜோடி என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஜோடியை ஐபிஎல் தொடக்கவிழா நிகழ்ச்சியில் நடனம் ஆட வைக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருவரும் இணைந்து ஒரு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடவுள்ளதாகவும், இதற்காக கடந்த சிலநாட்களாக இருவரும் பயிற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சி விழாவில் ஹிருத்திக் ரோஷன், ரிஷி தவான் ஆகியோரும், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ப்ரினீதி சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டு நடனம் ஆடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



