நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் முன்னரும், கட்சி ஆரம்பித்த பின்னரும் தமிழக அரசை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அமைச்சர்களும் அவ்வப்போது பேசி வருகின்றனர். கமல்ஹாசனுக்க்கும் தமிழக அமைச்சர்களுக்குமான இந்த விமர்சன போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது
இந்த நிலையில் நேற்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனை விமர்சனம் செய்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: ‘இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை பற்றி பேசாத நடிகர் கமல், தற்பொழுது போராடும் மக்களிடம் பேசுவதைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருப்பதாகவும், கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது. வசனம் எழுதிக் கொடுத்தால் பேசக்கூடியவர்” என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்
மேலும் எத்தனை முறை தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-தான் வெற்றிபெறும், மற்றவர்கள் அனைவரும் ஜீரோதான் என்று கூறிய அமைச்ச்சர், காவிரி விவகாரத்தில் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்



