ஜம்முவில் சமீபத்தில் 8 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து கண்டனம் தெரிவிக்காதவர்களே இல்லை என்ற நிலையில் நடிகை தமன்னாவும் தனது பங்கிற்கு தனது டுவிட்டரில் ஆவேசமாக குற்றவாளிகளை தண்டிக்க குரல் கொடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
ஜம்முவில் 8 வயது சிறுமியும், இன்னொரு ஊரில் 16 வயது பெண்ணும் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதை எதிர்த்து போராடிய அவளது தந்தை அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளியை பாதுகாக்க இப்படி நடந்து இருக்கிறது. நம்நாடு எதை நோக்கி செல்கிறது? இன்னும் எத்தனை பேர் இதுபோல் தங்கள் வாழ்வை தியாகம் செய்ய வேண்டுமோ? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத நாடு பின்னடைவு கொண்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்
தமன்னாவின் இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளிகள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். தமன்னா போன்ற பிரபலங்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் அந்த பிரச்சனை தீர்வை நோக்கி செல்லும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.