ஆளுநர் மாளிகையில் போர்வை தலையணை வாங்கியதில் முறைகேடு: 2 பேர் கைது

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

guindy raj bhavan - 2026

ஆளுநர் மாளிகைக்கு போர்வை, தலையணை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆளுநர் மாளிகைக்கு போர்வை, தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கியதில் 10 கோடி ரூபாய் மோசடி நடைபெற்ற விவகாரத்தில்,ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடையாறில் உள்ள சேட் பர்னிஷிங் என்ற கடையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதில், வழங்கப்படாத பொருட்களுக்கு போலி ரசீதுகளைக் கொடுத்து பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பர்னிச்சர் கடையின் உரிமையாளர் முகமது யூனுஸ் சேட் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், போலி பில் தயாரித்து மோசடியில் உடந்தையாக இருந்த ராஜேஷ், ஜஸ்டின் என்ற ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 2 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.