ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் காலமானார் !

Published:

Smt Rajalakshmi Parthasarathy Passed Away 3 - 2026பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரும் அதன் தாளாளருமான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 93.

வயோதிகத்தாலான உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி பார்த்தசாரதி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்று மரணமடைந்தார் என அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

சென்னையின் பிரபலமான பத்மா சேஷாத்ரி கல்விக் குழுமங்களை உருவாக்கியவரான ராஜலட்சுமி பார்த்தசாரதி கல்வியாளர் மட்டுமல்ல பத்ரிகையாளராகவும், தியேட்டர் கலைஞராகவும் பன்முகத்திறமையாளராக செயல்பட்டிருக்கிறார்

Smt Rajalakshmi Parthasarathy Passed Away 7 - 2026பிரபல நடிகர் ஒய் ஜி மஹேந்திரனின் தாயாரான இவருக்கு ஒய் ஜி ராஜேந்திரன்என்ற பெயரில் மற்றொரு மகனும் உண்டு.

மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளுடன் நிறைவாக வாழ்ந்தவரான ராஜலட்சுமி பார்த்தசாரதியின் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக தி நகர், திருமலைப்பிள்ளை தெருவில் இருக்கும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் வைக்கப்படவிருக்கிறது.

அவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணி அளவில் பெசண்ட் நகர்மின் மயானத்தில் நடைபெறும் என்று தகவல்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img