சினிமா நடிகை ஆகிறார் ’கல்யாணம் முதல் காதல் வரை’ புகழ் ப்ரியா பவானி!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா

priyabavani shankar - 2026

சென்னை:

கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானி சங்கர் சினிமா படத்தில் நடிக்க உள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். சின்னத்திரை நடிகை ஆனாலும், பெரிய திரை நடிகைகளுக்கு இணையாக அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே டிவி சீரியல் நடிகை ப்ரியா பவானி சங்கர்தான்!

ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, திடீரென திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறி சீரியலில் இருந்து விலகினார். தனது காதலரை திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போவதாகக் கூறினார் ப்ரியா. பரவாயில்லை, திருமணம் செய்து கொண்டால் என்ன, தொடர்ந்து நடிங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், டிவி சீரியலில் ப்ரியா தொடர்ந்து நடிக்க மாட்டாரா என்று ஏங்கிய ரசிகர்களை உற்சாகப் படுத்தும் விதமாக, ப்ரியா தமிழ் சினிமா ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரியா எந்தப் படத்தில் யாருடன் நடிக்க உள்ளார் என்ற விவரங்கள். ஆனால் 15 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.