பெங்களூர் மதுகடையில் பெண்களுக்கு தனி வரிசை: வைரலான படம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
bangalore wine shop

மதுபானக் கடைகளில் கூடிய கூட்டத்தால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. எனினும், பல இடங்களில் குடிமகன்கள், குடிமகன்கள் இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து, சரக்குகளை வாங்கிச் சென்றனர்.

கர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, பெங்களூருவில் பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மே 4, திங்கள்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில நிபந்தனைகளுடன் வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மத்பானக் கடைகள் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து, மதுப்பிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். பெங்களூருவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குவிந்ததால், அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன. பலர் இதனை விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை இருந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

liquor
liquor

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.