பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
admk help in tenkasi

பெரியபிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் முன்னாள் கிளை செயலாளர் வேம்பு என்ற ரவி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

தென்காசி மாவட்டம், பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் வேம்பு என்ற ரவி தனது சொந்த செலவில் பல்வேறு நிவாரண பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் பெரிய பிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் வேம்பு என்ற ரவி கலந்து கொண்டு இலவச அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

இதே போல அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற, முதியோர்களுக்கு வீடு வீடாகச் சென்று அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், அருணாச்சலம், முருகைய்யா, குரு முருகன், சுப்பையா, முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.