December 6, 2025, 6:07 AM
23.8 C
Chennai

‘செலக்டிவ் மனித உரிமை போராளி’ மலாலாவுக்கு சூடு கொடுத்த ஹீனா சித்து!

Heena Sidhu - 2025

‘காஷ்மீர் பாகிஸ்தானில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள், ஏனெனில் உங்களைப் போன்ற பெண்கள் அங்கே மிகவும் நன்றாக இருந்தார்கள்?’ என்று துப்பாக்கி ரவையின் வீச்சைக் காட்டிலும் துல்லியமான கேள்விக் கணையை வீசியிருக்கிறார் ஒலிம்பிக் மெடல் வென்ற இந்தியாவின் ஹீனா சித்து.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் அண்மைக் காலமாக காஷ்மீர் பிரச்னை குறித்து ட்வீட் செய்துவருகிறார். அவரிடமிருந்து ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்ததைப் போல்… அவர் மீண்டும் பாகிஸ்தானின் பிரசார பீரங்கியாகத் திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் ஊதுகுழலாக கருத்துகளை வெளியிட்டு வரும் மலாலா, போலி செய்திகளையும் கூட பரப்பினார். குறிப்பாக, ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரு காஷ்மீர் மாணவர் தற்போதைய நெருக்கடி நிலையால் தனது தேர்வுகளைத் தவறவிட்டார் என்று கருத்து தெரிவித்தார், உண்மையில், ஈத் காரணமாக அன்றைய தினம் பள்ளிகள் மூடப்பட்டன என்பது தெரியவந்ததும் உலக அளவில் அசிங்கப் பட்டார்.

மலாலாவின் ட்வீட் உலகெங்கிலும் உள்ள சமூக ஊடக பயனர்களின் பெரும் விமர்சனத்தைப் பெற்றது. அந்த வரிசையில் இப்போது, ​​ஒலிம்பியனான பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்துவும் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீர் பிரச்னையில் மலாலா பாகிஸ்தான் அரசின் குரலை ஒலித்து வருகிறார். அவர் ஏன் முதலில் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்…

ஹீனா சித்து @ HeenaSidhu10

சரி, எனவே நீங்கள் காஷ்மீரை பாக்கிஸ்தானிடம் ஒப்படைக்க முன்மொழிகிறீர்கள், ஏனென்றால் உங்களைப் போன்ற பெண்கள், கல்வியில் மிகச் சிறந்தவர்களாக இருந்ததால், நீங்கள் கிட்டத்தட்ட உங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டீர்கள்! உங்கள் நாட்டிலிருந்து ஓடினீர்கள் திரும்பி வரவே இல்லை. நீங்கள் முதலில் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று, ஏன் உங்கள் கருத்தை எங்களுக்குக் காட்டக்கூடாது?! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

malala 3 - 2025

முன்னதாக, மலாலா தனது டிவிட்டர் பதிவில், “நான் பள்ளிக்குச் செல்ல முடியாததால் மனச்சோர்வில் இருக்கிறேன். ஆகஸ்ட் 12 ஆம் தேதி எனது தேர்வுகளைத் தவறவிட்டேன், இப்போது எனது எதிர்காலம் பாதுகாப்பற்றது என்று உணர்கிறேன். நான் ஒரு எழுத்தாளர் ஆகி, சுதந்திரமான எழுத்தாளராக, வெற்றிகரமான காஷ்மீர் பெண்ணாக வளர விரும்புகிறேன். ஆனால் இந்த நிலை தொடர்ந்தால் அது மிகவும் கடினம்.” என்று ஒரு காஷ்மீரப் பெண் சொன்னதாக பதிவு செய்திருந்தார்.

ஆனால் அவர் குறிப்பிடும் தேதியும், தகவலும் தவறானவை என்று பலரும் அவருக்கு பதிலளித்துள்ளனர்.

மலாலா, மனித உரிமை மீறல்கள் குறித்த கண்டனங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிடுவதில் வல்லவராகி விட்டார். இஸ்லாமிய சமூகம் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இழைக்கும் அட்டூழியங்களுக்கும் அராஜகங்களுக்கும் எதிராக வாயை இறுக்கமாக மூடிக் கொண்டிருப்பதை தேர்ந்தெடுத்தவராக இருக்கிறார்.

அவரது சொந்த நாடான பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது! அதை பாகிஸ்தான் அமைச்சர்களும், பிரதமர் இம்ரானும் கூட ஒப்புக் கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் தனது சொந்த நாட்டுக் குடிமக்களான பஷ்டூன்கள், பலூசிஸ்தான் மற்றும் சிந்துவில் உள்ள பூர்வீக குடிமக்களை பெரும் அளவில் கொன்று குவித்துள்ளது.

பாகிஸ்தானிய உளவு அமைப்புக்கு பயந்து, மலாலாவும் பாகிஸ்தானில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதமாற்றங்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான சம்பவங்கள் குறித்து அமைதியாக இருப்பதையே தேர்வு செய்துள்ளார்.

இஸ்லாமிய மதம் அல்லாத நாடுகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து தார்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவற்றை வெளிப்படுத்த, ​​மலாலா தனது துணிச்சலை மீண்டும் வெளிக்காட்டுவதாகத் தெரிகிறது.

மலாலாவும், பராக் ஒபாமாவும் அமைதிக்கான நோபல் பரிசுகளைப் பெற்றதன் மூலம், நோபல் பரிசு தனது தனித்தன்மையையும் மரியாதையும் இழந்து விட்டது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories